விருந்தோம்பல் (Hospitality)
விருந்தோம்பல் பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம். ‘ விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது. மண்ணுலகில் சிறப்புற விருந்தோம்பியவர்கள், இறையுலகில் இறைவனால் விருந்தோம்பப் பெறுவர் என்ற மாண்பினைத் தமிழர்கள் தலைமேற் கொண்டதினால் தான், ” அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” என்ற சங்கப்பாடல் வரி எழுந்தது. தமிழர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியம...
Comments
Post a Comment